search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி"

    எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    காரைக்குடி,

    காரைக்குடி பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சினைக் கண்டித்தும், அதற்காக அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இளையகவுதமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நில உரிமை மீட்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழேந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் கணேசன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சேசு ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற நிலையில் அவர்கள் திடீரென பஸ் மறியலுக்கு முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி முதல்வருக்கு மார்க். கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். #vckravikumar

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்கட்சியினர் கடுமையாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் தடுத்திட ரவிக்குமாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #vckravikumar

    ×